Saturday, December 27, 2014

அழகிற்கு அழகு சேர்க்க சில பயனுள்ள குறிப்புகள் !

1. தினமும் காலையில் எழுந்ததும் ஒரு லிட்டர் தண்ணீர் குடித்து வந்தால் அன்றைய நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வலம் வருவீர்கள். சோர்வு என்பதே எட்டிப்பார்க்காது.

2. தினமும் காலையில் எழுந்ததும் பழங்கள் சாப்பிடுவது இளமையை அதிகரிக்கும். குறிப்பாக, ஆப்பிள், ஆரஞ்சு, பப்பாளிப் பழங்கள் சாப்பிடுவது நல்லது.

3. தினமும் காலையில் ஒன்று அல்லது இரண்டு கேரட்டை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் ஒருவித மினுமினுப்பை பெறலாம்.

4. தினமும் காலை, மாலை வேளைகளில் 5 நிமிடம் மூச்சுப்பயிற்சி செய்து வந்தால் அன்றைய தினம் முழுவதும் நீங்கள் புத்துணர்ச்சியோடு காணப்படுவீர்கள்.

5. கறிவேப்பிலையின் இளம் இலைகளை காய வைத்து பொடியாக்கி, அதை தேங்காய் எண்ணெயில் கலந்து தலையில் தேய்த்து வந்தால் முடி கருகருவென்று வளரும்.

6. தயிருடன் கடலை மாவு சேர்த்து முகத்தில் அப்ளை செய்து வந்தால் முகப்பரு தொல்லை இருக்காது.

7. இரண்டு டீஸ்பூன் தேனுடன் எலுமிச்சம் பழச்சாறு நான்கு சொட்டு கலந்து குடித்து வந்தால் உடலில் தேவையற்ற கொழுப்பு சேர்வது தடுக்கப்படும்.

8. தோலில் உள்ள மருக்கள் மற்றும் கரும் புள்ளிகளை பப்பாளி நீக்குகிறது. இதற்கு பப்பாளி பழத்தை மசித்து அதனுடன் 1 ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து முகத்தில் பூசி வர வேண்டும்

Friday, December 26, 2014

உதடுகளை ஆரோக்கியமாக வைத்திருக்க...

அடிக்கடி உதடுகள் வறண்டுவிடுகிறதா? அப்படி எனில் நீங்கள் கண்டிப்பாக நாவால் வருடி உதடுகளை ஈரப்படுத்திக்கொள்வீர்கள். இதுவே அதிகரிக்கும்பொழுது, எச்சிலில் உள்ள பாக்டீரியா உங்கள் உதடுகளில் புண்களை ஏற்படுத்திவிடும்.

இதற்கு என்ன செய்யலாம்? 
வழிமுறை: 1
உதடுகள் சுருங்கி காணப்பட்டால் உங்கள் உடலில் கொழுப்புச் சத்து குறைவாக உள்ளது என்று பொருள். இவற்றைப்போக்க வெளிப்புறத்திலிருந்து உதடுகளுக்கு ஊட்டம் கொடுக்க முடியும். வாசலின் தடவுவதன் மூலம் அதை சமன் செய்து உதட்டுச் சுருக்கத்தைப் போக்கலாம்.

வழிமுறை: 2

உடல்நல குறைவுக்கும், உடல் அதிக உஷணம் அடைவதற்கு முதல் முக்கியகாரணம், உடலில் உள்ள நீர்ச்சத்து குறைவதுதான். அதனால் அடிக்கடி தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை மேற்கொண்டு, உடலில் நீர்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதோடு ஊட்டச்சத்து மிக்க உணவுகளை வகைகளை உண்டு வந்தாலே எந்த உடல் பிரச்னைகளும் இல்லாமல் நலமாக வாழ முடியும்.

வழிமுறை: 3

வெயில் மற்றும் வெப்பத்தால் உதடுகள் கறுத்து போவதை தவிர்க்க இயலாது. இவ்வாறு உதடு கறுத்துப்போவதிலிருந்து காத்து, சிவப்பான உதடுகளைப் பெற ஒரு ஸ்பூனில் பாலேடும், நெல்லிக்காய் சாறு 5 சொட்டுகள் கலந்து, நாள்தோறும் உதடுகளில் அக்கலைவை பூசி வர உதட்டின் கருமை நிறம் வெகுவிரைவில் மறையும்.
வழிமுறை: 4

ஒரு ஸ்பூன் ஆரஞ்சு பழச்சாறும், உப்பு கலக்காத வெண்ணெயும் எடுத்து அவை இரண்டையும் கலக்கி, ஒரு கலவையாக்குங்கள். அக்கலவையை வறண்டு, உலர்ந்து, கறுமையாக மாறிய உதடுகளின் மேல் பூசி வர, உதடு வெடிப்பு, உதடு கறுமையாதல்.. போன்ற உதட்டுப் பிரச்னைகள் குணமடைந்து, உதடுகள் நல்ல இயற்கையான நிறத்தைப் பெறும்

Sunday, December 21, 2014

ஸ்மார்ட்போன்களுக்கான Wireless Charger கண்டுபிடிப்பு

  ஸ்மார்ட் போன்களில் சார்ஜ் செய்வதற்கு புதிய வயர்லஸ் சார்ஜர் கண்டுடிக்கப்பட்டுள்ளது.

மின்சக்தியை வயர்லஸ் முறையில் அனுப்புவதற்கு பல்வேறு ஆய்வு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2007 ஆம் ஆண்டில், எம்.ஐ.டி. என அழைக்கப்படும், உலகின் முன்னணி பொறியியல் ஆய்வு மையமான Massachusetts Institute of Technology (MIT) இந்த வகையில் முதல் ஆய்வினை மேற்கொண்டது.

பின்னர், பல பல்கலைக் கழகங்கள் இதனைத் தொடர்ந்தன. இவர்களில், கொரியன் ஆய்வு மையம், குறிப்பிடத்தக்க வெற்றியை அடைந்துள்ளது.

கொரியா அறிவியல் மற்றும் தொழில் நுட்ப மையத்தைச் சேர்ந்த Korean Advanced Institute of Science and Technology (KAIST) இந்த வல்லுநர்கள், டயபோல் காயில் ரெசனண்ட் சிஸ்டம் "Dipole Coil Resonant System” (DCRS) என்ற ஒன்றை இதற்கென உருவாக்கிப் பயன்படுத்தி உள்ளனர்.
new-wireless-charger-for-smartphone

இது ட்ரான்ஸ்மிட்டருக்கும், மின் சக்தியை ஏற்றுக் கொள்ளும் சாதனத்தில் உள்ள காயில்களுக்கும் இடையே செயல்பட்டது.

இனி, வீடுகளில் Wi-Fi வழி INTERNET (இணைய இணைப்பு) பயன்படுத்துவது போல, வயர் இணைப்பு இன்றி, ஒரே நேரத்தில் பல மொபைல் சாதனங்களை சார்ஜ் செய்து கொள்ளலாம்.

இத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, கொரியாவைச் சேர்ந்த பொறியியல் வல்லுநர்கள், ஒரே நேரத்தில், 16 அடி தூரத்தில் வைத்து 40 ஸ்மார்ட் போன்களை சார்ஜ் செய்து, சாதனை படைத்துள்ளனர்.

வயர் இணைப்பு எதுவும் இன்றி, மின்சக்தியைக் கடத்தும் ஆய்வு தற்போது பல பல்கலைக் கழகங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Saturday, November 29, 2014

வாலிபர்களே! திருமணம் செய்ய ஆசையா??திருமணம் செய்வதற்கு முன் இதையும் கொஞ்சம் அறிந்து கொள்ளுங்கள்....

 ஒரு  முஸ்லிமான ஆண் திருமணம் செய்வதற்கு தனக்கு வாழ்க்கை துணைவியாக  வரவிருக்கும் பெண்ணை நேரில் சென்று பார்ப்பது நபிவழியாகும். ஆனால் இன்று  முஸ்லிம் சமுதாயத்தில் இந்த நடைமுறை மாற்றமடைந்து பெண் பார்ப்பதற்கு  குடும்பத்தினர் ஒவ்வொருவரும் வெவ்வேறு நேரங்களில் சென்று பார்த்து விட்டு  கடைசியில் பெண் பிடிக்கவில்லை என்று சொல்லி விடுகிறார்கள்.

அதுவும்  பெண் பிடிக்காதது மணமகனுக்கல்ல. அவனது குடும்பத்தினர்க்கு என்பது கசப்பான  உண்மை. அதேபோன்று குடும்ப அங்கத்தவர்கள் அனைவரும் பெண் பார்த்துவிட்டு  வந்ததன் பின் கடைசியாக மணமகன் பெண்ணை பார்த்துவிட்டு தனக்கு பிடிக்கவில்லை  என்கிறான்.

இவ்வாறு பலமுறை பெண் பார்த்துவிட்டு கடைசியில் பிடிக்கவி ல்லை என்பதால் அந்தப் பெண்
எவ்வளவு மனவேதனை அடை வாள் என்பதை இவர்கள் சிந்திக்க வேண்டாமா?
அது  மட்டுமல்லாமல் அந்த பெண் வீட்டினர் வசதியற்றவர்களாக இருந்தால் எவ்வளவு  சிரமத்திற்கு மத்தியில் ஏற்பாடு செய்ய வேண்டியிருக்கும், அவர்கள் சில  வேளைகளில் கடன் பெற்றும் ஏற்பாடு களை செய்திருப்பார்கள்.

நாம்  பலமுறை சென்று மூக்குமுட்ட சாப்பிட்டு விட்டு கடைசியில் பெண்ணை  பிடிக்கவில்லை என்று சாதாரணமாகச் சொல்லிவிடுகிறோம். எனவே யார் மணமகனோ அவன்  முதலிலேயே சென்று பெண்ணை பார்த்து சம்மதம் சொல்லவேண்டும் என்பதே  இஸ்லாத்தின்
நிலைப்பாடாகும். திருமணம் என்பது ஊருக்கல்ல, எமது குடும்பத்திற்கல்ல. நாம்
ஒரு பெண்ணை திருமணம் முடிப்பதென்றால் நாம்தான் பெண்ணை பார்த்து உறுதி செய்ய வேண்டும்.

ஒரு முஸ்லிம் ஆண், திருமணம் செய்யும் நோக்கத்தில் பெண்ணைப் பார்க்க சென்றால் பெண்
மார்க்கப்பற்று  உள்ளவளா என்பதைத் தான் பார்ப்பான், அதை விடுத்து சினிமா நடிகை போன்று  இருக்கவேண்டும் என்ற நோக்கத்தில் பெண் பார்க்க சென்றால் அவன் முஸ்லிமாக  நடிக்கும்
பெயரளவு முஸ்லிம் என்பதில் சந்தேகம் இல்லை.

இளமையில்  வழி தவறி விடக்கூடாது என்ற நோக்கமும் திருமணத்திற்கு முக்கியம் என்பதால்  மார்க்கப்பற்றுள்ள ஒரு பெண் தேவை என்ற நோக்கம் முதலில் இருக்க வேண்டும்,
பெண் மார்டனாக, ஸ்லிம்மாக, பேசியல் செய்த முகத்துடன் இருக்கவேண்டும்
என்று  எண்ணுபவன் பெண்ணை மணமுடித்து சினிமாவில் நடிக்கவைத்து  சம்பாதிக்கப்போகிறானா? அல்லது மார்டன்செய்து கேட் வாக் செய்து சம்பாதிக்க  வைக்கப்
போகி றானா? ஹிஜாப் இன்றி ஜோடியாக கைகோர்த்து வெளியில் சுற்றி  பார்க்கிறவர்களுக்கு அருமையான ஜோடியாக தெரிய வேண்டும் என்று எண்ணுகிறானா?

ஐவேளை தொழுகையை நிறைவேற்றி வரும் பெண் பேசியல் செய்து கொள்வாளா?
ஐவேளை உளூ செய்து வரும் பெண்ணின் முகம் அல்லாஹ்வுக்குப் பொருத்தமான
இருக்கும் பொலிவு போதாதா? அல்லாஹ்வை விட அல்லாஹ்வுக்கே சொல்லித்தரக்கூடியவர்கள் இந்த உலகில் உள்ளார்களா?

சினிமா நடிகை போன்று ஸ்லிம்மாக திருமணம் செய்து ஒரு குழந்தை பெற்ற பின்
குண்டாவது இயற்கை. குண்டாகிவிட்டால் தலாக் சொல்லி அனுப்பிவிடுவாயா?
ஆண்களும்  கூட்டாக சேர்ந்து பெண்ணை பார்ப்பது கூடுமா? இஸ்லாமிய பெண் திருமணத்திற்காக  தன்னை காண வரும் மணமகனுக்கு இஸ்லாம் வரையறுக்கப்பட்ட அளவில்
தன்முகத்தைக் காட்டுவதற்கு அனுமதி இருக்கிறது ஆனால், அவனின் மாமன் மச்சான் எல்லாம்
அப்பெண்ணை பார்க்க மார்க்கம் அனுமதிக்கிறதா என்றால் மார்க்கத்தில்
அனுமதி இல்லை .

தலையை  மறைத்து வைத்திருக்கும் பெண்ணை தலையில் இருந்து துணியை நீக்கச் சொல்லி  மாப்பிள்ளையாக தன்னை எண்ணிக் கொண்டிருக்கும் மிருகத்தின் மாமன் மச்சான்  எல்லாம் அன்னியப் பெண்ணை அப்படி பார்க்க இஸ்லாம் அனுமதிக்கவில்லை.

பெண்  பார்க்கும் இன்னுமொரு முறைதான் மணமகனின் ,மணமகளின் போட்டோவை பார்த்து  முடிவெடுப்பது. இன்றைய காலகட்டத்தில் போட்டோக்களில் ஒருவரை எவ்வாறு  வேண்டுமானாலும் நவீன தொழிநுட்பத்தை பயன்படுத்தி மாற்றிக்
கொள்ளலாம்.

எனவே  ஒருவர் போட்டோவை பார்த்து சம்மதம் சொல்லிவிட்டு நேரில் பார்த்ததும்  திகைத்துவிடுகின்றார். குறிப்பாக வெளி நாடுகளில் வேளை செய்பவர்கள்  அங்கிருந்துகொண்டு இன்டர்நெட்டில், போட்டோவில் பெண் பார்ப்பதை தவிர்க்க  வேண்டும். ஒருவருடைய தோற்றத்தை நேரில் பார்ப்பதின் மூலமே மிகச் சரியாக  அறிந்துகொள்ளலாம்.

இதனாலேயே இஸ்லாம் ஒரு பெண்ணை திருமணம் செய்வதென்றால் நேரில்
சென்று பார்த்துக்கொள் என்று கட்டளையிடுகிறது என்பதை புரிந்து செயற்படுவோம்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான்கு (நோக்கங்களு) க்காக ஒரு பெண் மணமுடிக்கப்ப டுகிறாள்:
1. அவளது செல்வத்திற்காக.
2. அவளது குடும்பப் பாரம்பரியத்திற்காக.
3. அவளது அழகிற்காக.
4. அவளது மார்க்க (நல்லொழுக்க)த்திற்காக.
ஆகவே, மார்க்க (நல்லொழுக்க)ம் உடையவளை (மணந்து)
கொண்டு வெற்றி அடைந்துகொள்!(இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்!இதை
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(ஸஹீஹ் முஸ்லிம் 2905)
வாலிபர்களே ! அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்

Saturday, August 30, 2014

உங்கள் வீட்டு ”பல்ப்” மூலமே இனி இன்டர்நெட்டை பயன்படுத்தலாம்


இனி இன்டர்நெட் பயன்படுத்த ‘வைபை’ வசதி இல்லையே என்று கவலைப்பட வேண்டாம். ஒரு பல்பை போட்டால் ‘லைபை’ வசதி கிடைத்து விடும். 
அதன் மூலம் இன்டர்நெட் பார்க்க முடியும். பாலா காலமாக குழந்தைகளுக்கு டிஜிட்டல் பொம்மை முதல் வீடியோ கேம் வரை, பல்பு முதல் பட்டாசு வரை எல்லாவற்றையும் மலிவு விலை யில் அள்ளிக்குவிக்கும் சீனா தான் இப்போது இந்த ‘பல்ப்’ மூலம் இன்டர்நெட் வசதியையும் கண்டுபிடித்துள்ளது.
ஒரு வாட் பல்பை வாங்கி எரிய விட்டால் போதும், அடுத்த நொடி இன்டர்நெட்டுக்கு உயிர் வந்துவிடும். லைட்டை ஆப் செய்து விட்டால் இன்டர்நெட்டுக்கான ‘லைபை’ போய் விடும். ஒரு பல்பு எரியவிட்டால் நான்கு கம்ப்யூட்டர் வரைக்கும் இன்டர்நெட்டை பயன்படுத்த முடியும்.
விநாடிக்கு 150 மெகாபைட் வேகம் கொண்டதான இந்த ”லைபை” குறித்து இன்னும் ஆராய்ச்சிகள் தொடர்கின்றன. வர்த்தக ரீதியாக பயன்படுத்த முழு அளவில் தயாரிக்கப்படும் என்று இதை கண்டுபிடித்த ஷாங்காய் பல்கலைக்கழக பேராசிரியர் சிநான் கூறினார். லெட் வகை பல்பில் மைக்ரோசிப் பொருத்தப்பட்டிருக்கும். அதன் மூலம் அலைக்கற்றைகள் எழுப்பப்பட்டு, இன்டர்நெட் வசதி ஏற்படுத்தப்படுகிறது. சீனாவில் ஷாங்காயில் நவம்பர் 5 ம் தேதி ஆரம்பிக்கப்பட உள்ள சர்வதேச கண்காட்சியில் இந்த ‘லைபை’ அறிமுகம் செய்யப்படுகிறது.
வழக்கமான ‘வைபை’ வசதி, ரேடியோ அலைகளை கொண்டு ஏற்படுத்தப்படுகிறது. அதன் மூலம் இன்டர்நெட் உயிர்பெறுகிறது. ஆனால், இந்த ஒரு வாட் பல்பை வைத்து சீனா, இன்டர்நெட்டை பயன்படுத்த முடியும் என்று கண்டுபிடித்துள்ளது. மலிவு விலை பொருட்களை கண்டுபிடி த்து உலக நாடுகளில் சந்தையில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்துள்ள சீனா வின் ‘லைபை’ கண்டுபிடிப் பால் தொழில்நுட்ப புரட்சி ஏற்படும் என்று தெரிகிறது.
சீனாவில் மட்டும் 60 கோடி பேர் இன்டர்நெட் வசதி வைத்துள்ளனர். அவர்கள் எல்லாம் ‘வைபை’யில் இருந்து தங்கள் சொந்த நாட்டு கண்டுபிடிப்பான ‘லைபை’க்கு மாறி விடுவர். மேலும், உலக நாடுகளில் பலவும் இந்த வசதிக்கு மாறினால், ‘வைபை’க்கு டாட்டா காட்டும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்று கணக்கு போடுகிறது சீனா.

Monday, August 25, 2014

தேனின் பல்வேறு மருத்துவ குணங்கள்

01  உடல் ஆரோக்கியத்திற்கு தேன் வழி வகுக்கும், தேனும் வெந்நீரும் கலந்து அருந்தினால் பருத்த உடல், மெலியும், ஊளைச் சதை குறையும் உடல் உறுதி அடையும்.
 
02  தேனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து அருந்தினால் வாந்தி, குமட்டல் ஜலதோஷம், தலை வலி குணமாகும்.
 
03  தேனுடன் வெங்காயச்சாறு கலந்து சாப்பிட்டால் கண்பார்வை பிரகாசம் அடையும்.
 
04  தேனும், முட்டையும், பாலும் கலந்து சாப்பிட்டுவந்தால் ஆஸ்துமா உபாதையிலிருந்து தப்பலாம்.
 
05  இருமல், சளித் தொல்லை நுரையீரல் தொடர்பான நோய் எது இருந்தாலும் பார்லிக் கஞ்சியை வடிகட்டி அதில் தேன் கலந்து சாப்பிட, இருமல் மட்டுப்படும். சளித் தொல்லை குறையும்.
 
06  தேனையும் மாதுளம் பழ ரசத்தையும் சம அளவு சேர்த்துத் தினமும் சாப்பிட்டால் இருதய நோய்கள் தீரும்.
 
07  உடம்பில் இரத்தக் குறைவு அல்லது சோகை நோய் இருந்தால் தேனும், பாலும் சாப்பிட்டு வந்தால் சோகை நோய் நீங்கும்.
 
 
08  தேனுடன் சுண்ணாம்பைக் கலந்து, நன்றாகக் குழைத்து பழுக்காத கட்டிகள் மேல் பூச கட்டிகள் பழுக்கும்.
 
09  மீன் எண்ணெயோடு தேனைக் கலந்து உண்டு வந்தால், ஆறாத புண்கள் ஆறிவிடும்.
 
10  கருஞ்சீரகத்தை நீர் விட்டுக்காய்ச்சி அதில் தேன் கலந்து சாப்பிட, கீழ் வாதம் போகும்.
11  வயிற்றுவலி ஏற்பட்டவர்களுக்குத் தொப்புளைச் சுற்றிலும் தேன் தடவினால் வலி நீங்கும்.
 
12  தேனோடு பாலோ, எலுமிச்சம் பழச்சாறோ கலந்து சாப்பிட பித்த நீர்த் தொந்தரவுகள் குறையும். கல்லீரல் வலுவடையும்.
 
13  அரை அவுன்ஸ் தேனுடன், அரை அவுன்ஸ் இஞ்சிச்சாறு கலந்து காலை நேரங்களில் தொடர்ந்து சாப்பிட்டு வர, இரத்த சுத்தியும், இரத்த விருத்தியும் ஏற்படும். நரம்புத் தளர்ச்சிகளும் நீங்கும்.
 
14  அல்சர் நோய்க்கு சாப்பாட்டிற்கு முன் இரண்டு கரண்டித் தேனைத் தொடர்ந்து சாப்பிட்டு வர, குணமாகும்.
15  முருங்கைக்காய்ச் சாறுடன் சமளவு தேன் கலந்து பருகினால் நீர்க்கோவை நீங்கும்.
 
16  தேன் மிகச் சிறந்த உணவுப் பொருளாகும். தேன் மூலம் எல்லாப் பிணிகளையும் நீக்கமுடியும். அதிகாலையில் வெறும் வயிற்றில் தேனை நாவால் தொட்டுச் சாப்பிட்டு வந்தால் எந்த வியாதியும் நமக்கு வராது. ஆனால், தேன் சுத்தமான தேனாக இருக்கவேண்டும்.
 
17  ஒரு டம்ளர் வெந்நீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து, பின்பு அதில் அரை எலுமிச்சம்பழச் சாற்றையும் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கும். நுரையீரலில் சேர்ந்துள்ள சளி எல்லாம் கண் காணாத இடத்திற்கு ஓடிவிடும். குடல் மற்றும் வயிற்றுக் கோளாறுகள் நீங்கிவிடும். குளிர்ச்சியால் ஏற்படும் எல்லா வியாதிகளையும் உடல் எதிர்த்து நின்று தடுத்துவிடும். இதய பாதிப்புகள் நீங்கி இதயம் பலம் பெறும். புதிய இரத்தம் உடம்பில் பாய்ந்தோடும்.
 
18 அதிகாலையிலும், படுக்கச் செல்வதற்கு முன்பும் பருகவேண்டும்.
 
19 நெல்லிக்காய்களைத் துண்டு துண்டாக்கி தேன், ஏலக்காய், ரோஜா இதழ்கள் சேர்த்து இரண்டு நாட்கள் வெயிலில் காய வைக்கவேண்டும். பின்பு ஒரு ஸ்பூன் வீதம் காலையும், மாலையும் சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குணமாகிவிடும்.
 
20  என்றும் இளமையுடன் இருக்க வேண்டு-மென விரும்புவோர் தினமும் தேனை அருந்தவேண்டும். நாற்பது வயதைக் கடந்தவர்கள் கண்டிப்பாகத் தினமும் தேனை அருந்திவர வேண்டும்

உங்களுக்கு ஞாபக சக்தி குறைவாக இருக்கிறதா ?


சில பேருக்கு நம்ம மூளையில் மெமரி கார்டு பொருத்தினால் கூட நல்லா இருக்கும் என்று நினைக்கும் அளவிற்கு ஞாபக சக்தி குறைவாக இருக்கிறது .தேவையான சத்துக்கள் நாம் சாப்பிடும் உணவிலிருந்து கிடைக்காததே இதற்கு காரணம்.

காரட்,தக்காளி,திராட்சை.ஆரஞ்சு,செர்ரி போன்ற பள பளப்பான வண்ண உணவுகளில் மூளைக்கு மிகத் தேவையான வைட்டமின்கள்,மினரல்கள், பைட்டோ கெமிக்கல்கள் நிறைந்துள்ளன.

ஒரு வாரம் காரட் சாப்பிட்டவர்களையும், காரட் சாப்பிடாதவர்களையும் பரிசோதித்த போது, காரட் சாப்பிட்டவர்களின் மூளைத் திறன் மிகச்சிறப்பாக இருந்தது என்கிறது மனோதத்துவ பேராசிரியர் பால்கோல்ட் என்பவரின் ஆய்வு முடிவுகள். இந்த உணவுகள் மூலம் மூளையில் செரோட்டனின், அசிட்டின் கோலைன் என்ற இரசாயனப் பொருட்கள் உற்பத்தியாகி உடல் இயக்கத்தில் கலப்பது தான் இதற்குக் காரணம் மூளையின் ஞாபக சக்தியை சிறப்பாக தக்க வைத்துக்கொள்வதற்கு கொழுப்பு சத்து தேவை. இதற்கு மீனிலிருந்தும், மீன் எண்ணெயிலிருந்து கிடைக்கும் என்-3 என்ற கொழுப்பு அமிலமே தினமும் தேவை. நல்ல முடிவை திடீரென்று எடுக்க மீனும் ஏதேனும் ஓர் இனிப்புமே போதுமாம்.சைவ உணவுக்கரர்கள் சோயா எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றை உபயோகிக்கலாம்.

மனித உடலிலே மூளை தான் அதிக ஆக்ஸிஜனை உபயோகிப்பது . எனவே, மூளையின் செல்கள் அழியாதிருக்க பைட்டோ கெமிக்கல் உள்ள உணவுகள் தேவை. இத்துடன் மூளை பலவீனம், குழப்பம், நோய்த்தாக்குதல், அல்சீமெர்ஸ் என்ற ஞாபக மறதிநோய் முதலியன ஏற்படாமல் இருக்க பி, ஏ, ஈ ஆகிய வைட்டமின் உள்ள உணவுகளும் தேவை.

மிகவும் கூர்மையாகச் சிந்தித்து முடிவு எடுக்கச் சர்க்கரை உதவும். இதற்கு பழம் அல்லது இனிப்பு வகைகள் சாப்பிடவும்.அரிசி, ரொட்டி, கோதுமை, உருளைக்கிழங்கு முதலியன கோபம் மற்றும் பதற்றம் போன்ற உணர்ச்சிகளை மெல்ல மெல்லக் கட்டுபடுத்திவிடும்.

மூளையைச் சரியாக, பாதுகாப்பாக பராமரிப்பதுடன் நல்ல மனப்பாங்கையும், காரியத்தைச் செய்து முடிக்கும் விடாமுயற்சியையும், பெர்சி மற்றும் செர்ரி பழங்கள், அப்ரிகாட், பீச், அவரைக்காய் முதலியன தந்துவிடுகின்றன.

மனதை அமைதிப்படுத்தி, தன்னம்பிக்கையை உணர்த்துவது வெள்ளைப்பூண்டு. மூளையின் செல்கள் வேகமாக அழிந்து போய்விடாமல் பாதுகாப்பதில் வெள்ளைப் பூண்டுக்கு நிகர் வேறு இல்லை.

ஞாபக சக்தி உள்ள உயிரினங்கள் எல்லாம் நீண்ட நாள் வாழ்கின்றன.எனவே, ஞாபக சக்தி அழியாமல் இருக்க வெள்ளைப் பூண்டைத் தவறாமல் சாப்பிடவும்.

பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் 54 முதல் 84 வயது வரை உள்ள ஆண்களை ஆராய்ந்து வந்தார்கள். இவர்கள் உடலில் பி வைட்டமின்கள் போதுமான அளவு இருந்தவர்கள் நல்ல ஞாபக சக்தியுடனும் சிறப்பான மூளைச் செய்ல் பாடும் உடையவர்களாக இருந்தனர்.ஆனால் அவர்களில்பி6 பி12 ஃபோலேட் ஆகிய வைட்டமின்கள் குறைவாக இருந்தவர்கள் மிகவும் மறதியும் மனக்குழப்பமும் உடையவர்களாக இருந்தனர்.

‘பி’ வைட்டமினைச் சேர்ந்த இநத மூன்று வைட்டமின்களும் நரம்புகளின் மூலம் மூளைக்கு தெளிவாகச் செய்திகளை அனுப்பி மூளை அமைதியுடன் குழப்பமில்லாமல் வேலை செய்ய உதவுகிறது என்பதை மட்டும் உறுதியாகக் கண்டுபிடித்துள்ளனர். இந்த வைட்டமின்கள் குறையும் போது தீய அமிலங்கள் மூளைக்கு மிகமெதுவாக எடுத்துச் செல்லப்படுகின்றன. இதனால் மூளையின் செயல்பாடுகளின் குழப்பம் ஏற்படுகிறது.
மதிய உணவில் தயிர் மற்றும் கீரை இருந்தால் இந்த வைட்டமின்கள் நன்கு நம் உடலில் சேர்ந்துவிடும். மூளையும் அற்புதமாக இயங்கும்

பப்பாளி பழத்தின் மருத்துவ குணங்கள்


பப்பாளி - கனி, விதைகள், இலைகள் என்று அனைத்துமே மருத்துவக்குணம் வாய்ந்தது.

பப்பாளி வயிற்றுக் கோளாறுக்கு மருந்தாகப் பயன்படுகிறது, செரிமானத்தை ஊக்குவிக்கிறது, பப்பாளிக் காயின் பால் வயிற்றில் உள்ள பூச்சிகளை அகற்றுகிறது.

தோலில் உள்ள மருக்கள் மற்றும் கரும்புள்ளிகளைப் போக்குகிறது. இதன் விதைகளும் பூச்சிகளை அகற்றும் மருந்து தயாரிக்க பயன்படுகிறது.

இலைகளின் சாறு காய்ச்சலைப் போக்கும் மருந்தாக பயன்படுகிறது. இதய நோயைக் குணப்படுத்தவும் பயன்படுகிறது.

பப்பாளியின் காய்களில் இருந்து பப்பைன் என்ற புரதங்களை சிதைக்கும் நொதி, கைமோபப்பைன், மாலிக் அமிலம், பெக்டின் களிகள், புரதம், சர்க்கரை, க்ரிப்டோசாந்தின், வயலா சாந்தின், கரோட்டின், அஸ்கார்பிக் அமிலம், தையமின், ரைபோபிளேவின், கார்ளப்பசமைன் போன்ற இரசாயனப் பொருட்கள் பிரித்தெடுக்கப்படுகிறது.

முகத்தில் கரும்புள்ளி நீங்க

வீட்டில் உள்ள பொருட்களை வைத்து முகத்தில் வரும் கரும்புள்ளிகளை நீக்க முடியும். இதற்காக அழகு நிலையங்களுக்கு செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவை என்னவென்று பார்க்கலாம்.. 
* உருளைக்கிழங்கை நறுக்கி அதனை முகத்தில் 15 நிமிடம் தேய்த்த பின்னர் காயவைத்து, குளிர்ந்த நீரில் கழுவிடவேண்டும். இதனால் கரும்புள்ளிகள் படிப்படியாக நீங்கிவிடும்.
* வெந்தயக் கீரையை நன்கு அரைத்து பேஸ்ட்செய்து கொள்ளவேண்டும். பின் அதனை முகத்தில் தடவி, சிறிதுநேரம் காயவைத்து, பிறகு கழுவவேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால், விரைவில் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்கி விடும்.
* கொத்தமல்லியுடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து அரைத்து பேஸ்ட்செய்து முகத்தில் தடவி காயவைத்து கழுவ வந்தால் கரும்புள்ளிகள் மறையும். இதை வாரம் இரு முறை செய்யலாம்.
* எலுமிச்சை சாற்றுடன், சர்க்கரையை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும் இதனால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்குவதோடு, சருமத்தில் இருக்கும் இறந்த செல்கள் வெளியேறி, சருமம் பளிச்சென்று காணப்படும்.
* கரும்புள்ளியை நீக்க சிறந்த ஒரு வீட்டு மருந்து என்னவென்றால் ஓட்ஸை பவுடர்செய்து, ரோஸ் வாட்டருடன் கலந்து முகத்திற்கு தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, பின்னர் கழுவ வேண்டும்.
* இரண்டு டேபிள் ஸ்பூன் தயிரை, ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன் கலந்து, தடவி வந்தால், கரும்புள்ளிகள் சீக்கிரம்போய் விடும்.
* தக்காளியை நன்கு பேஸ்ட் செய்து, கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை தினமும் செய்து வந்தால், கரும்புள்ளியை நீக்கிவிடலாம்.
* பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலந்து, அதனை முகத்தில் தடவி, 30நிமிடம் ஊறவைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவினால், கரும்புள்ளிகள் போய்விடும்.
- மேற்கூறிய டிப்ஸ்களையெல்லாம் செய்துவந்தால், முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீக்கி, அழகான சுத்தமான சருமத்தை பெறலாம்.

கணினி உலகின் புதிய கண்டுபிடிப்பு: MeRAM

alt
  SDRAM, DDR, DDR2, DDR3 என்ற வரிசையில் புதிதாக MeRAM (Magneto Electric Random Access memority) எனும் புது வகை நினைவகம் கடந்த வாரம்
நடந்த 2012 IEEE International Electron Devices Meeting in San Francisco வில் அறிமுகம் செய்யப்பட்டது. ““Voltage-Induced Switching of Nanoscale Magnetic Tunnel Junctions” எனும் தலைப்பில் நடந்த கருத்தரங்கில் MeRAM பற்றிய தகவல்கள் முதன் முதலில் வெளியிடப்பட்டன.
spin-transfer torque (STT) எனப்படும் மின் காந்த தொழில்நுட்பத்தில் மின்சாரத்தில் உள்ள நகரும் எலெகட்ரான் மூலம் தகவல்களை நினைவாகத்தில் எழுதும் புதிய முறையை கண்டுபிடித்துள்ளனர்.
Electron களில் உள்ள காந்தப் பண்பான “சுழற்சி” (Magetic property of elctrons – referred as spin in addition to their charge) எனும் வகையில் இந்த ஆராய்ச்சி நடந்துள்ளது.
ஆராய்ச்சியாளர்கள் சில சிக்கல்களை சந்தித்தனர், அதிக தகவல்களை எழுத முற்படும் போது அதிக எண்ணிக்கையில் Electron களை சுழலச் செய்வதால் அதிக மின்சாரமும் அதிக வெப்பமும் ஏற்பட்டது, இதை தவிர்க்க மின்சாரத்தில் உள்ள Voltage ஐ நேரடியாக பயன்படுத்திப் பார்த்தனர். இப்போது வெப்பமும் ஏற்படவில்லை அதே நேரத்தில் குறைந்த இடத்தில் அதிக தகவல்களை எழுத முடிந்தது.
இதன் மூலம் மிகக் குறைந்த மின்சாரம்(10 – 1000 மடங்கு குறைவு) , மிக அதிக வேகம், அதிக இடம் (5 மடங்கு) மற்றும் மிகக் குறைந்த விலையில் கணினி நினைவகங்களை உருவாக்க முடியும்.
கணினி மட்டும் அல்லாது செல்போன், TV போன்ற பிற மின்சாதனங்களில் இதை குறைந்த விலையில் பயன்படுத்த இயலும்.

Wednesday, August 20, 2014

SAMSUNGமொபைல் போன்களுக்கான குறியீட்டுகள...!

உங்களுக்கு தெரிந்திருக்கலாம் அல்லது தெரியாமலிருக்கலாம் anyway share பண்ணுக
SAMSUNGமொபைல் போன்களுக்கான குறியீட்டுகள...!
1)*#9999# - தங்கள் போனின் சாப்ட்வேர் சார்ந்த தகவல்களை அறிய.
2)#*3849# -தங்கள் சாம்சங் மொபைல் போனை மீண்டும்Rebootசெய்ய.
3)*#06# -சாம்சங் போனின்IMEI (EMI)எண்ணை அறிய. இது மிக முக்கிய ஓர் எண்ணாகும்.
4)#*2558# -தங்கள் போனின் கடிகாரத்தை இயக்க அல்லது நிறுத்த. தங்கள் போனின் மொபைல் போனின் டைமை ஆன் செய்ய அல்லது ஆப் செய்ய.
5)#*7337# -தங்கள் அண்மைகால சாம்சங் மொபைல் போனை அன்லாக் செய்ய(UnLock).
6)#*4760# -தங்களில் போனில்GSM Featuresயை இயக்க அல்லது நிறுத்த.
7)*#9998*246# -தங்கள் போனின் மெமரி திறன் மற்றும் பேட்டரியின் திறனை அறிய.
8)*#7465625# -தங்கள் போனின் கடவுசொல் நிலைமை அறிய.
9)*#0001# -தங்கள் போனின் சீரியல் எண்ணை காண.
10)*#2767*637# -தங்கள் மொபைல் போனை அன்லாக் செய்ய.
11)*#8999*636# -தங்கள் போனின் சேமிப்பு கொள்ளலவு நிலைமையை காண.
12)*#8999*778# -தங்கள் சிம் கார்ட் பற்றிய தகவல்களை அறிய.
13)#*#8377466# -தங்கள்போனின் ஹாட்வேரின் தன்மை மற்றும்Versionயை அறிய.
14)#*3888# -சாம்சங் போன்களின்Bluetoothயின்தகவல்களைஅறிய.
15)#*5376# - ஒரே கட்டளையில் தங்கள் போனின் அனைத்து மெசேஜ்யும் ஒரே கட்டளையில் நீக்க அல்லது அழிக்க.
16)#*2472# -தங்கள் போனின் சார்ஜிங் நிலைமை அறிய.
ஒரு சில கோடுகள் சில போன்களில் இயங்காது.

Wednesday, August 13, 2014

android applications

android applications
Facebook 16.0
(2402)
Social | 23.8MB





  • Zalo - Nhắn gửi yêu thương
    (25)
    Communication | 11.8MB





  • Zing Mp3
    (16)
    Music & Audio | 3.3MB




  • Viber
    (348)
    Communication | 20.2MB





  • UC Browser 9.9.2
    (4884)
    Tools | 12.8MB




  • Camera360 Ultimate
    (312)
    Photography | 26.2MB





  • Xo So 10H.VN
    (2)
    Entertainment | 1.8MB





  • NEED FOR SPEED™ Shift
    (16)
    Racing | 1.2MB




  • Samurai II: Vengeance
    (60)
    Action | 40.9MB




  • PhotoWonder
    (119)
    Photography | 32.7MB




  • Facebook Messenger
    (1222)
    Social | 13MB





  • Avatar 3D
    (61)
    Action | 2.8MB




  • TubeMate -youtube downloader
    (17449)
    Media & Video | 3.6MB





  • NhacCuaTui
    (7)
    Media & Video | 1.3MB





  • Talking Tom Cat 2
    (641)
    Entertainment | 38.1MB




  • THE KING OF FIGHTERS '97
    (114)
    Arcade | 6.4MB





  • Yahoo! Messenger
    (17)
    Social | 3.8MB




  • YouTube 5.9.0
    (391)
    Media & Video | 10.3MB




  • LINE: Free Calls & Messages
    (671)
    Social | 20.6MB




  • Asphalt 8: Airborne
    (275)
    Racing | 24.2MB





  • Viet Mobi TV Free
    (22)
    Media & Video | 9.9MB




  • Google Translate
    (83)
    Education | 3.3MB




  • MX Player 1.7.30
    (5762)
    Media & Video | 11MB





  • Nấm Lùn v2014
    (7)
    Adventure | 3.3MB




  • Tiny Flashlight LED
    (306)
    Tools | 1MB





  • Bkav Security - Antivirus Free
    (14)
    Security | 1.7MB




  • Tango Messenger, Video & Calls
    (101)
    Social | 21.1MB





  • Death Defens FPS
    (98)
    Action | 4.7MB





  • iLauncher - iOS7 Launcher
    (72)
    Personalization | 1MB





  • iKara - Sing Karaoke
    (4)
    Entertainment | 4.3MB





  • Lich Van Su (Lịch Âm Dương)
    (3)
    Lifestyle | 3.8MB




  • Skype - free IM & video calls
    (278)
    Communication | 19.2MB